மக்கள் சக்தி திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் உடன்படிக்கையில் MAS Holdings கைச்சாத்து

மக்கள் சக்தி திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் உடன்படிக்கையில் MAS Holdings கைச்சாத்து

எழுத்தாளர் Bella Dalima

10 Nov, 2016 | 6:49 pm

இலங்கையின் ஆடை கைத்தொழில் துறையில் பிரபல்யம் பெற்றுள்ள எம்.ஏ.எஸ். ஹோல்டிங்ஸ் (MAS Holdings) நிறுவனம் நாட்டைக் கட்டியெழுப்பும் மக்கள் சக்தி திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க தீர்மானித்துள்ளது.

அதன்படி, எம்.ஏ.எஸ். ஹோல்டிங்ஸ் நிறுவனம் மற்றும் கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்திற்கு இடையில் இன்று புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டது.

எம்.ஏ.எஸ். ஹோல்டிங்ஸ் நிறுவனம் சார்பில் அதன் பிரதி தலைவர் செரட் அமலின் கைச்சத்திட்டதுடன், மக்கள் சக்தி திட்டம் சார்பில் வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் குழுமப்பணிப்பாளர் செவான் டேனியல் கைச்சாத்திட்டார்.

இந்த ஒத்துழைப்பினையும் பெற்றுக்கொண்டு நாட்டைக் கட்டியெழுப்பும் மக்கள் சக்தி திட்டத்தின் ஊடாக மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்த நியூஸ்பெஸ்ட் தயாராகவுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்