டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய இடங்களை அடையாளம் காணும் விசேட திட்டம் இன்றும், நாளையும்

டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய இடங்களை அடையாளம் காணும் விசேட திட்டம் இன்றும், நாளையும்

டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய இடங்களை அடையாளம் காணும் விசேட திட்டம் இன்றும், நாளையும்

எழுத்தாளர் Staff Writer

10 Nov, 2016 | 10:22 am

டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய இடங்கள் மற்றும் டெங்கு நோயாளர்களை அடையாளம் காணும் விசேடத் திட்டம் இன்றும், நாளையும் கொழும்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வேலைத்திட்டத்திற்காக 300 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி கூறினார்.

குறிப்பாக முகத்துவாரம், மட்டக்குழி, தெமட்டகொட, கிருலப்பணை மற்றும் நாராஹேன்பிட்ட ஆகிய பகுதிகளிலேயே அதிக எண்ணிக்கையான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ருவன் விஜயமுனி குறிப்பிட்டார்.

நிலவுகின்ற அதிக மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கமைய வீடு வீடாக சென்று டெங்கு நோயாளர்கள் மற்றும் டெங்கு நுளம்புகள் பரவும் இடங்களை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பிரதம வைத்திய அதிகாரி ருவன விஜயமுனி மேலும் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்