டிரான் அலஸ், சாலிய விக்ரமசூரிய மற்றும் ஜயந்த டயஸ் சமரசிங்கவிற்கு பிணை

டிரான் அலஸ், சாலிய விக்ரமசூரிய மற்றும் ஜயந்த டயஸ் சமரசிங்கவிற்கு பிணை

எழுத்தாளர் Bella Dalima

10 Nov, 2016 | 8:02 pm

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ், சாலிய விக்ரமசூரிய மற்றும் ஜயந்த டயஸ் சமரசிங்க ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நீதிபதியால் பிரதிவாதிகளுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ்ஸை விளக்கமறியலில் வைக்குமாறு ஏற்கனவே மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் இடைநிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்