கண்டி உள்ளிட்ட சில பகுதிகளில் 12 மணித்தியால நீர்வெட்டு

கண்டி உள்ளிட்ட சில பகுதிகளில் 12 மணித்தியால நீர்வெட்டு

கண்டி உள்ளிட்ட சில பகுதிகளில் 12 மணித்தியால நீர்வெட்டு

எழுத்தாளர் Staff Writer

10 Nov, 2016 | 10:41 am

திருத்த வேலைகள் காரணமாக கண்டி உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கட்டுகஸ்தோட்டை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்த வேலையின் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் அலாஹுடீன் அன்சார் கூறினார்.

இதன் பிரகாரம் கண்டி, ஹாரிஸ்பத்துவ, அக்குரண, பூஜாபிட்டிய, பொக்காவெல, மெதவெல, ஹேதெனிய, கட்டுகஸ்தோட்டை குலுகம்மன ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த நீர்வெட்டு காரணமாக பாதிக்கப்படக்கூடிய வைத்தியசாலை போன்றவற்றிற்கு பொது இடங்களுக்கு பௌசர் மூலம் நீரை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்