அலுவலக நேரத்தை மாற்றுவது தொடர்பில் அரசாங்கம் கவனம்

அலுவலக நேரத்தை மாற்றுவது தொடர்பில் அரசாங்கம் கவனம்

அலுவலக நேரத்தை மாற்றுவது தொடர்பில் அரசாங்கம் கவனம்

எழுத்தாளர் Staff Writer

10 Nov, 2016 | 8:30 am

தற்போது நிலவியுள்ள அதிக வாகன நெரிசலுக்கு தீர்வாக அலுவலக நேரத்தை மாற்றுவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இதற்கமைய பத்தரமுல்ல பகுதியில் இந்த திட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக மாநகரங்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க தெரிவித்தார்.

அங்குள்ள நிறுவனங்களின் அதிகாரிகளை வரவழைத்து இது தொடர்பில் கலந்துரையாடி ஜனவரி மாதமளவில் இந்த திட்டத்தை 3 மாதங்களுக்கு பரீட்சார்த்தமாக நடைமுறைபடுத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தத் திட்டம் வெற்றியடைந்தால் கொழும்பு முழுவதும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக மாநகரங்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

பஸ்களில் அலுவலகத்திற்கு செல்பவர்களை தவிர கார் மற்றும் வேன் போன்ற வாகனங்களைக் கட்டுப்படுத்துவதே இதன் நோக்கமாகும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்