Perpetual Treasuries நிறுவனம் தொடர்பான மேலும் பல இரகசிய தகவல்கள் வெளியீடு

Perpetual Treasuries நிறுவனம் தொடர்பான மேலும் பல இரகசிய தகவல்கள் வெளியீடு

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2016 | 8:56 pm

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மத்திய வங்கியின், முறிகள் கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புப்பட்ட Perpetual Treasuries நிறுவனம், பங்குச்சந்தை ஊடாக வேறு நிறுவனங்களின் பங்குகளை கொள்வனவு செய்துவருகின்றது.

Perpetual Treasuries நிறுவனம், அவர்களின் பெயரிலும் அவர்களுடன் தொடர்புப்பட்ட வேறு நிறுவனங்களின் பெயரிலும் பங்கு கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டு வருவதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அவர்கள், வங்கிகள் மற்றும் வங்கியற்ற நிதி நிறுவனங்களிடமிருந்து பங்குகளை கொள்வனவு செய்வதற்கு அதிக ஆர்வம், அக்கறை கொண்டுள்ளனர்.

கடந்த வாரம் நாம் வெளிப்படுத்தியதைப் போன்று, என்.டி.பி வங்கியில் 7 வீத பங்குகளை Perpetual Treasuries மற்றும் பேர்பச்சுவல் எக்வடீஸ் என்ற பெயர்களில் கொள்வனவு செய்துள்ளனர்.

இதேவேளை, சென்றல் பினான்ஸ் நிறுவனத்தின், பேர்பச்சுவல் இகுவடீஸ் நிறுவனத்திற்கான பங்குகளின் எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக அதிகரித்து வந்துள்ளதாக பங்குச்சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜூன் 30 ஆம் திகதி நிறுவனம் வெளியிட்ட, பிரபல பங்காளர்களின் பட்டியலில் ஏழாவது இடத்திலிருந்த பேர்பச்சுவல் எக்வடீஸ் நிறுவனத்திடம் 2.308 மில்லியன் பங்குகள் காணப்பட்டன.

ஒக்டோபர் முதலாம் திகதி நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில் இந்த பங்குகளில் எண்ணிக்கை 4.77 ஆகஅதிகரித்துள்ளது.

அதன்படி, பேர்பச்சுவல் இகுவடீஸ் நிறுவனம் சென்றல் பினான்ஸ் நிறுவனத்திடமிருந்து 2.4 மில்லியன் பங்குகளை அதிகமாக கொள்வனவு செய்தமையை காண முடிகிறது.

Perpetual Treasuries மற்றும் பேர்பச்சுவல் எக்வடீஸ் நிறுவனங்களின் தொடர்பு, அவர்களின் முகவரியை பார்க்கும்போது அறிந்துகொள்ள முடிகிறது.

என்.டி.பீ வங்கியின் பங்கு உரிமையாளர்களின் பட்டியலில் பேர்பச்சுவல் எக்வடீஸ் நிறுவனத்தின் முகவரி, மூன்றாம் மாடி, ப்ரின்ஸ் எல்பிரட் டவர், இலக்கம் 10, எல்பிரட் ஹவுஸ் கார்டன், கொழும்பு 03 என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் முதல் நிலை பங்காளர்களின் பட்டியலில் Perpetual Treasuries நிறுவனத்தின் முகவரி, இலக்கம் 10, ப்ரின்ஸ் எல்பிரட் டவர், எல்பிரட் ஹவுஸ் கார்டன், கொழும்பு 03 என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்மூலம், Perpetual Treasuries நிறுவனம் மற்றும் பேர்பச்சுவல் எக்வடீஸ் ஆகிய நிறுவனங்களுக்கு இடையிலான தொடர்பை புரிந்துகொள்ள முடியும்.

சுயாதீன செய்தி மூலம் ஊடாக உறுதிப்படுத்த முடியாவிடினும், தேர்ஸ்டன் இன்வெஸ்மென்ட் லிமிடெட் என்ற நிறுவனமும் Perpetual நிறுவனத்துடன் தொடர்புபட்டுள்ளதாக அறிய முடிவதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை நேற்று (06) செய்தி வெளியிட்டிருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்