ஹிலரியின் புதிய மின்னஞ்சல்களில் எவ்வித முறைகேடுகளும் இல்லையென FBI தெரிவிப்பு

ஹிலரியின் புதிய மின்னஞ்சல்களில் எவ்வித முறைகேடுகளும் இல்லையென FBI தெரிவிப்பு

ஹிலரியின் புதிய மின்னஞ்சல்களில் எவ்வித முறைகேடுகளும் இல்லையென FBI தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2016 | 5:02 pm

ஹிலரி கிளின்டனின் புதிய மின்னஞ்சல்களில் எவ்வித முறைகேடுகளும் இல்லையென அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பான FBI அறிவித்துள்ளது.

முறைகேடுகள் இடம்பெற்றுள்ளமைக்கான எவ்வித ஆதாரங்களும் இல்லையெனவும் FBI யின் பணிப்பாளர் FBI Director James தெரிவித்துள்ளார்.

ஹிலரி கிளின்டன் அமெரிக்க இராஜாங்க செயலாளராக செயற்பட்ட காலப்பகுதியில் அரசியல் நடவடிக்கைகளுக்காக தமது தனிப்பட்ட மின்னஞ்சல் கணக்கினை பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

ஹிலரி கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ம் திகதி முதல் 2014 ம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அனுப்பிய மற்றும் பெற்றுக் கொண்ட 30,322 மின்னஞ்சல்கள் தொடர்பில் விக்கிலீக்சினால் தகவல் வெளியிடப்பட்டது.

இது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்த அமெரிக்க மத்திய புலனாய்வு பிரிவு இந்த விவகாரம் தொடர்பில் ஹிலரிக்கு எதிராக குற்றவியல் வழக்கு தொடரப் போவதில்லை என கூறியிருந்தது.

இதனை தொடர்ந்து வெளியாகியுள்ள புதிய மின்னஞ்சல்கள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன்னர் FBI தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் புதிய மின்னஞ்சல்கள் குறித்த முழுத் தகவல்களையும் வெளியிடுமாறு, கோரியிருந்த ஹிலரி இது தொடர்பில் FBI கடந்த ஜுலை மாதத்தில் எடுத்திருந்த முடிவு,மாறாது என்று தாம் உறுதியாக நம்புவதாக தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்