ரணில் விக்ரமசிங்கவின் திறமையால் இந்த அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறவில்லை – கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி

ரணில் விக்ரமசிங்கவின் திறமையால் இந்த அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறவில்லை – கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2016 | 8:26 pm

இலங்கையைப் போன்று சர்வதேச நாடுகளிலும், ஆட்சியாளர்களின் ஊழலுக்கு எதிராக மக்கள் குரல் எழுப்பி வருவதை காணக்கூடியதாகவுள்ளது.

இந்த நிலைமை, தேசிய மற்றும் சர்வதேச அரசியல்வாதிகளின் எதிர்காலத்தை பாதிக்குமா?

கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி இது குறித்து நியூஸ்பெஸ்ட்டுக்கு கருத்துத் தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அரசியல் விமர்சகர் கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி…

[quote]இலங்கை மற்றும் சர்வதேச நாடுகளைப் பொருத்தமட்டில் அரசியல்வாதிகள் மற்றும் பிரபல வர்த்தகர்கள் ஊழலுடன் தொடர்புபட்டுள்ள நிலைமையை காண்கின்றோம். இலங்கையில் இடம்பெற்ற முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில், பிரதமர் மீது நேரடியாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
ஹிலரி கிளின்டன் மீது, ஜூலியன் அசாஞ் முன்வைத்த குற்றச்சாட்டுக்களும் அதுபோன்ற ஒன்றாகும். இந்த விடயத்தை பல்வேறு கோணங்களில் புரிந்துகொள்ள வேண்டும். இந்த விவகாரம் தொடர்பில் மக்களின் நிலைப்பாட்டை வெளியிட வேண்டும்.
தகவல்களை மறைத்து வைத்திருக்க முடியாது. எனினும், அரசியல்வாதிகள் தகவல்களை மறைக்கும் விடயத்தையே முதலில் செய்கின்றனர். மத்திய வங்கியின் முறிகள் விநியோக சம்பவத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு ஒரு பாரதூரமான விடயமாகும்.[/quote]

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்