மொனராகலை மாவட்டத்தில் காட்டு யானைகள் சுற்றிவளைப்பு

மொனராகலை மாவட்டத்தில் காட்டு யானைகள் சுற்றிவளைப்பு

மொனராகலை மாவட்டத்தில் காட்டு யானைகள் சுற்றிவளைப்பு

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2016 | 12:51 pm

மொனராகலை மாவட்டத்தில் சில பகுதிகளில் நேற்று காட்டு யானைகள் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.

வெள்ளவாய, ஹதபானகம மற்றும் ஆனாபல்லம ஆகிய பகுதிகளில் இந்த காட்டு யானைகள் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.

வௌ்ளவாய வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் சிவில் பாதுக்காப்பு அதிகாரிகள் இந்த சுற்றிவளைப்பை முன்னெடுத்தனர்.

யானைகளை யால சரணாலையத்திற்கு துரத்தியதாக வனஜீவராசிகள் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூன்று தினங்களாக முன்னெடுக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை நாளை மற்றும் நாளை மறுதினங்களிலும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்