மீள்குடியேற்ற கனவு எப்போது நிறைவேறும் என்ற ஏக்கத்துடன் வாழும் தாளிக்குளம் மக்கள்

மீள்குடியேற்ற கனவு எப்போது நிறைவேறும் என்ற ஏக்கத்துடன் வாழும் தாளிக்குளம் மக்கள்

மீள்குடியேற்ற கனவு எப்போது நிறைவேறும் என்ற ஏக்கத்துடன் வாழும் தாளிக்குளம் மக்கள்

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2016 | 9:00 pm

கடந்த மூன்று தசாப்தங்களாக நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையினால் தாய் மண்ணை பிரிந்து கடல்தாண்டி செல்ல வேண்டிய நிலை எம்மில் பலருக்கு ஏற்பட்டது.

பல்வேறு எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் மீண்டும் தாயகம் திரும்பியவர்களுக்கு நிதந்தர வீடு என்பது எட்டாக்கனியாகவே உள்ளது.

சுமார் 485 குடும்பங்கள் வாழ்ந்த வவுனியா – தாளிக்குளம் கிராமத்தில் யுத்தம் காரணமாக தமது சொந்த இருப்பிடங்களில் இருந்து வெளியேற வேண்டிய நிலை இப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டது .

எனினும் யுத்தம் நிறைவடைந்த பின்னர் மீள தங்களின் இடங்களுகக்கு திரும்பியவர்கள் சிலர் இன்றும் வீடுகள் அற்ற நிலையில் நிர்க்கதியாகியுள்ளனர் .

மீண்டும் நாட்டிற்கு வந்துள்ளவர்களில் சுமார் 90 குடும்பங்களுக்கு இன்னமும் வீடுகள் வழங்கப்படாத நிலையில் கொட்டில்களிலேயே இவர்கள் வாழ்கின்றனர்.

சாளம்பை குளம் பகுதியில் கட்டப்பட்டுள்ள வீடுகள் மக்கள் பாவனை இன்றி காணப்படும் நிலையில் பலர் இன்னும் வீடுகள் அற்ற நிலையில் வாழ்வது கவலைக்குரியதே.

பல தடவைகள் தமக்கான வீடமைப்புத் திட்டம் தொடர்பில் கோரிக்கை விடுத்தும் இந்த மக்களுக்கான வீட்டுத் திட்டங்கள் தொடர்பில் உரிய அதிகாரிகள் பாராமுகமாகவே உள்ளனர்.

தமது மீள் குடியேற்ற கனவு எப்போது நிறைவேறும் என்ற ஏகக்துடன் உள்ளனர் தாளிக்குளம் மக்கள்

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்