மிஹின் லங்கா விமான சேவையின் மேலும் 2 பணியாளர் குழுக்கள் ஸ்ரீலங்கன் விமான சேவையில் இணைப்பு

மிஹின் லங்கா விமான சேவையின் மேலும் 2 பணியாளர் குழுக்கள் ஸ்ரீலங்கன் விமான சேவையில் இணைப்பு

மிஹின் லங்கா விமான சேவையின் மேலும் 2 பணியாளர் குழுக்கள் ஸ்ரீலங்கன் விமான சேவையில் இணைப்பு

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2016 | 12:16 pm

மிஹின் லங்கா விமான சேவையின் மேலும் இரண்டு பணியாளர் குழுக்களை ஸ்ரீலங்கன் விமான சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய விமான நிலைய அலுவலக பணியாளர்கள் 50 பேர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பணிக்கு அமர்த்துவதற்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மிஹின் லங்கா விமான சேவை கையகப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த பணியாளர்களை ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு இணைத்து கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவையின் முகாமைத்துவ பிரிவுடன் மிஹின் லங்கா பணியாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து அவர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்குள் உள்ளீர்கப்படாத மிஹின் லங்கா விமான சேவை ஊழியர்களுக்கு அரச வழிகாட்டலுக்கு அமைய சேவையிலிருந்து விலக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்