புறக்கோட்டையில் தங்க நகை கொள்ளையில் ஈடுபட்ட பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது

புறக்கோட்டையில் தங்க நகை கொள்ளையில் ஈடுபட்ட பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது

புறக்கோட்டையில் தங்க நகை கொள்ளையில் ஈடுபட்ட பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2016 | 12:29 pm

கொழும்பு – 13 ஆதுருப்பு வீதி பகுதியில் தங்காபரண பட்டறையில் இடம்பெற்ற கொள்ளை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் மேல் மாகாண புலனாய்வுப் பிரிவு பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிரிபத்கொட பகுதியை சேர்ந்த 46 வயதான குறித்த சந்தேகநபர் கலென்பித்துனுவெவ பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

அவருடன் பியகம பகுதியை சேர்ந்த 37 வயதான மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – 13 ஆதுருப்பு வீதி பகுதியில் தங்காபரண பட்டறையில் கடந்த செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி இந்திய பிணையாளர்கள் இருவரை பணயக் கைதிகளாக சிறைவைத்து இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்