புகைத்தலை கட்டுப்படுத்தும் போராட்டத்திற்கு உலக தலைவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

புகைத்தலை கட்டுப்படுத்தும் போராட்டத்திற்கு உலக தலைவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2016 | 8:04 pm

புகைத்தலை கட்டுப்படுத்தும் கொள்கைக்கு சவாலாக அமையும் விடயங்களுக்கும் எதிராக செயங்படுவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

புகைத்தலை கட்டுப்படுத்தும் கொள்கைக்கு சவாலாக அமையும், அனைத்து விடயங்களுக்கும் எதிராக முன்நின்று செயற்படுவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இந்தியாவில் தெரிவித்தார்.

புகைத்தலை கட்டுப்படுத்தும் ஜனாதிபதியின் முயற்சியைப் பாராட்டி, இம்முறை இந்தியாவில் நடைபெறும் விசேட மாநாட்டில் உரையாற்றுவதற்கு, உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கை ஜனாதிபதிக்கும் அழைப்பு விடுத்திருந்தது.

அதன்படி, உலக சுகாதார ஸ்தாபனத்தின் புகைத்தலை கட்டுப்படுத்தும் கொள்கையில் கையொப்பமிட்டுள்ள 186 நாடுகளின், 1800 பிரதிநிதிகள் மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று உரையாற்றினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்