நான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

நான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

நான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2016 | 11:00 am

மழையுடனான வானிலையை அடுத்து நான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

இரத்தினப்புரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று பகல் 11.30 வரை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மண்மேடு இடிந்து விழுதல் மற்றும் கற்பாறைகள் சரிதல் போன்ற விடயங்கள் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் மண்சரிவு மற்றும் முன்னெச்சரிக்கை முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ். பண்டார குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில் இரத்தினப்புரி மாவட்டத்தின் அயகம மற்றும் எலபாத்த உள்ளிட்ட பிரதேச செயலக பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகள் அபாய வலையங்களாக அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, களுத்தறை மாவட்டத்தின் அகலவத்தை, வலல்லாவிட்ட , புலத்சிங்ஹள, பாலிந்த நுவர ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலும் மண்சரிவு அபாயம் நிலவுவதாக ஆர்.எம்.எஸ். பண்டார தெரிவித்துள்ளார்.

மாத்தறை மாவட்டத்தின் தெனியாய மற்றும் பிட்டபெத்தராவ ஆகிய பிரசேத செயலக பிரிவுகளிலும், காலி மாவட்டத்தில் தவலம மற்றும் நெலுவ ஆகிய பிரதேச செயலக பிரிவுகளிலும் மண்சரிவு அபாய எச்சரிக்கை நிலவுவதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் மண்சரிவு மற்றும் முன்னெச்சரிக்கை முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ். பண்டார குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை தொடர்பான எதிர்வுகூறல்களை தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுமாறு இடர்முகாமைத்து நிலையம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்