தொடர் மழையினால் நாட்டின் சில பகுதிகளில் அனர்த்தங்கள் பதிவு

தொடர் மழையினால் நாட்டின் சில பகுதிகளில் அனர்த்தங்கள் பதிவு

தொடர் மழையினால் நாட்டின் சில பகுதிகளில் அனர்த்தங்கள் பதிவு

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2016 | 8:17 pm

நாட்டில் தொடரும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக, சில பகுதிகளில் அனர்த்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

மழையுடன் கூடிய சீரற்ற வானிலை காரணமாக தென் மாகாணத்தின் சில பகுதிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

நேற்று பெய்த கடும் மழையின் போது, இமதூவ, அங்குலுகஹ, ஹபரகல பிரதேசத்தில் வீடொன்றின்மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.

இமதூவ பிரதேசத்தில் மேலும் 5 வீடுகள் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.

இமதூவ அக்குரஸ்ஸ வீதியின் சில இடங்களில் மண்மேடுகள் சரிந்து வீழ்ந்தமையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடும் மழை காரணமாக கொழும்பு – கண்டி வீதியில் யக்கல விதியவத்த பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த மூன்று மாடிக்கட்டடமொன்று இன்று அதிகாலை இடிந்து வீழ்ந்துள்ளது.

இந்த கட்டடத்தின் கீழ் மாடியில் நேற்றைய தினமே வர்த்தக நிலையமொன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடும் மழை காரணமாக கிங் கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக, கிங் கங்கையின் அண்மித்துள்ள சில தாழ் நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

கிங்கங்கையின் நீர் மட்டம் அதிகரித்தமையால் ஆற்றிலிருந்த மூன்று முதலைகளில் ஒரு முதலை கரையொதுங்கியது.

நேற்றிரவு முழுவதும் பொலிஸார் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சியால் முதலை பிடிக்கப்பட்டு மீண்டும் ஆற்றில் விடப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்