ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய ஓய்வுபெற்ற விசேட தேவையுடைய இராணுவ வீரர்களுக்கு ஓய்வூதியம்

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய ஓய்வுபெற்ற விசேட தேவையுடைய இராணுவ வீரர்களுக்கு ஓய்வூதியம்

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2016 | 9:27 pm

12 வருட சேவை காலத்தை நிறைவுசெய்யாத ஓய்வுபெற்ற விசேட தேவையுடைய இராணுவ வீரர்களுக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் ஓய்வூதியம் வழங்கப்படுமென எழுத்துமூலம் அவர்களுக்கு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

12 வருட கால சேவையை நிறைவுசெய்த பின்னர் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதிய கொடுப்பனவு, 12 வருடகால சேவையை நிறைவுசெய்யாது சுயமாக ஓய்வுபெற்ற விசேட தேவையுடைய இராணுவத்தினருக்கும் பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஓய்வூதிய கொடுப்பனவை பெற்றுக் கொடுத்தல் தொடர்பில் ஜனாதிபதியினால் விசேட அமைச்சரவைப் பத்திரமொன்று ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அனுமதி கிடைத்த பின்னர் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் முதல் அவர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

இதுதொடர்பான கோரிக்கைகளை முன்நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த விசேட தேவையுடைய இராணுவ வீரர்களின் பிரதிநிதிகளுடன் பாதுகாப்பு செயலாளர் இன்று நடத்திய பேச்சுவார்த்தையின் போதே ஜனாதிபதியின் எழுத்து மூல தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்