கூடாரமிட்டு வாழ வேண்டிய அவல நிலையை எதிர்நோக்கியுள்ள  எதுராபொல தோட்ட மக்கள்

கூடாரமிட்டு வாழ வேண்டிய அவல நிலையை எதிர்நோக்கியுள்ள  எதுராபொல தோட்ட மக்கள்

கூடாரமிட்டு வாழ வேண்டிய அவல நிலையை எதிர்நோக்கியுள்ள  எதுராபொல தோட்ட மக்கள்

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2016 | 8:07 pm

பாடசாலையொன்றின் மைதானத்தில் கூடாரமிட்டு வாழ வேண்டிய அவல நிலையை, புலத்கொஹூபிடிய – எதுராபொல தோட்ட மக்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

லயன் அறைகளில் சிரமத்துடன் வாழும் மலையக மக்கள், கூடார வாழ்க்கைக்கும் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

மண்சரிவு அபாய எச்சரிக்கையை அடுத்து, புலத்கொஹூபிடிய – எதுராபொல தோட்ட மக்கள் அங்கிருந்து வெளியேறினர்.

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் லயன் அறைகளிலிருந்து வெளியேறிய இந்த மக்கள் தொடர்ந்தும் தற்காலிக கூடாரங்களிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

இதேவேளை, எதுராபொல பகுதியை சேர்ந்த மேலும் 36 குடும்பங்கள், சீலானந்த மகா வித்தியாலயத்தில் கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர்.

மண்சரிவு அபாயம் எனக்கூறி பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறு, சீரற்ற வானிலையின் போது இந்த மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

பாதுகாப்பான பகுதிகளை அடையாளம் கண்டு அங்கு நிரந்தரமான குடியிருப்புக்களை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமல்லவா?

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்