காலி இமதுவ பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது

காலி இமதுவ பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2016 | 1:58 pm

காலி இமதுவ பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.

இதனால் குறித்த வீட்டிற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

மண்மேடு சரிந்து விழும் சந்தர்ப்பத்தில் கையடக்கத் தொலைபேசியில் பதிவான காட்சி எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

அத்துடன் இமதுவ பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மேலும் 5 வீடுகளுக்கு சேதமேற்பட்டுள்ளது.

மேலும் படகொட மலைத்தொடரை அண்மித்த பகுதிகளில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இமதுவ அக்குரஸ்ஸ பிராதான வீதியில் பல இடங்களில் மண்மேடுகள் சரிந்து வீழ்வதனால் இந்த பாதையூடான போக்குவரத்தும் தடைபப்ட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கையடக்கத் தொலைபேசியில் பதிவான காட்சி…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்