வயது ஒரு தடையில்லை என நிரூபித்த சீனாவின் கவர்ச்சியான தாத்தா (Photos)

வயது ஒரு தடையில்லை என நிரூபித்த சீனாவின் கவர்ச்சியான தாத்தா (Photos)

வயது ஒரு தடையில்லை என நிரூபித்த சீனாவின் கவர்ச்சியான தாத்தா (Photos)

எழுத்தாளர் Bella Dalima

05 Nov, 2016 | 10:32 pm

நமக்கு பிடித்தமானவற்றைச் செய்வதற்கு வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் சீனாவைச் சேர்ந்த வாங் டேஷன் என்ற முதியவர்.

சீனாவின் வடகிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர் 80 வயதான வாங் டேஷன்.

இவர் தனது பிறந்தநாளன்று சீனாவின் ஃபேஷன் ஷோவில் பங்கேற்று, நடந்ததன் மூலம் சீனாவின் ‘கவர்ச்சியான தாத்தா’ என்று சமூக வலைத்தளங்களிலும், சீன மக்களிடையேயும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இது குறித்து தொலைக்காட்சி நேர்காணலொன்றில் வாங் டேஷன் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

[quote]எனது மகளின் மூலம்தான் எனக்கு இந்த வாய்ப்புக் கிடைத்தது. நான் ஒரு நாடகக் கலைஞன். பல படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் என்னை இந்த ஃபேஷன் ஷோ மூலம்தான் மக்கள் அடையாளம் கண்டிருக்கிறார்கள். என்னைக் கொண்டாடுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை நான் இந்த நாளுக்காக எப்போதோ தயராகி விட்டேன். 50 வயதிலிருந்து உடற்பயிற்சி தீவிரமாக செய்து வருகிறேன். 79 வது வயதில் முதன்முதலில் ஃபேஷன் ஷோவில் நடந்தேன். இது இரண்டாவது முறை. நமக்கு விருப்பமான செயல்களில் ஈடுபட வயது ஒரு தடையே இல்லை. எனக்கு தற்போது 80 வயதாகிறது ஆனால் இன்னும் எனக்கு கனவுகள் நிறைய உள்ளன. அதனை நிச்சயம் அடைவேன். நாம் மனம் தளரும் வரை நம்முடைய கனவுகளை யாராலும் நம்மிடமிருந்து பறித்து விட முடியாது.[/quote]

 

igwupezr

80-year-old-chinese-model-with-a-perfect-body-proves-it-isnt-too-late-to-pursue-your-dreams

5ddde3bf-4839-4379-80e9-8d7e4dfa1661

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்