முல்லைத்தீவு மாவட்டத்தில் வீடற்றவர்களுக்காக 10 புதிய கிராமத் திட்டம்: சஜித் பிரேமதாச

முல்லைத்தீவு மாவட்டத்தில் வீடற்றவர்களுக்காக 10 புதிய கிராமத் திட்டம்: சஜித் பிரேமதாச

எழுத்தாளர் Bella Dalima

05 Nov, 2016 | 7:07 pm

“செமட்ட செவண” எனும் ”அனைவருக்கும் நிழல்” தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் வீட்டு உபகரணங்கள் மற்றும் சீமெந்து வழங்கும் நிகழ்வு முல்லைத்தீவில் இன்று நடைபெற்றது.

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது சஜித் பிரேமதாச பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்,

[quote]இந்த மாவட்டத்தில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடுகள் இன்றி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். யுத்தம் நிறைவடைந்து பல வருடங்கள் கடந்துள்ள நிலையில், மக்களின் வீட்டுப் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாமல் இருப்பது குறித்து நாடு என்ற ரீதியில் மிகவும் கவலையடைய வேண்டும். எதிர்வரும் ஜனவரி மாதம் உலக வீடமைப்பு திட்டத்திற்கு 30 வருடங்கள் பூத்தியடைகின்றன. இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் 10 புதிய கிராமத் திட்டத்தினை ஆரம்பித்து, அதன் ஊடாக வீடற்றவர்களுக்கு வீடு வழங்கப்படும் என்ற விடயத்தை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.[/quote]

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்