புது டெல்லியில் கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவு காற்று மாசு அதிகரிப்பு

புது டெல்லியில் கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவு காற்று மாசு அதிகரிப்பு

புது டெல்லியில் கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவு காற்று மாசு அதிகரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

05 Nov, 2016 | 4:12 pm

இந்தியத் தலைநகர் புது டெல்லியில் காற்று மாசு அதிகரித்திருப்பதால் மக்களுக்கு நோய்கள் தாக்கும் அபாயம் அதிகரித்துள்ளது.

இந்தியாவின் வட மாநிலங்கள் பலவற்றிலும் காற்று மாசு அதிகரித்து வருகிறது.

புது டெல்லியில் கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவு காற்று மாசு அதிகரித்து உள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் துறை எச்சரித்துள்ளது.

டெல்லி மட்டுமல்லாது பஞ்சாப், ஹரியானா, மற்றும் ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களிலும் மாசு அளவு கடுமையாக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் டெல்லியில் பல பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் முகமூடி அணிந்து வரவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்