கொழும்பின் பல பகுதிகளில் இரவு 9 மணி முதல் நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் இரவு 9 மணி முதல் நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் இரவு 9 மணி முதல் நீர் வெட்டு

எழுத்தாளர் Bella Dalima

05 Nov, 2016 | 3:02 pm

கொழும்பின் பல பகுதிகளில் இன்று இரவு 9 மணி முதல் நாளை காலை 5 மணி வரை 8 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, பேஸ்லைன் வீதியில் களனிப் பாலத்திற்கு அருகிலிருந்து தெமட்டகொட சந்தி வரையிலான பிரதான வீதியிலும், அனைத்து உள்வீதிகளிலும், செட்டியார் தெரு, அதனை அண்மித்துள்ள உள்வீதிகள், கொழும்பு 13, 14 மற்றும் 15 ஆகிய பிரதேசங்களுக்கான நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

நீர் விநியோகக் குழாய்களைத் திருத்தும் பணிகளுக்காகவே நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்