கந்தப்பளையில் கடும் மழையால் நிலம் தாழிறங்கியது: நூற்றுக்கும் அதிகமானோர் பாதிப்பு

கந்தப்பளையில் கடும் மழையால் நிலம் தாழிறங்கியது: நூற்றுக்கும் அதிகமானோர் பாதிப்பு

எழுத்தாளர் Bella Dalima

05 Nov, 2016 | 8:44 pm

நுவரெலியா – கந்தப்பளை, கோணப்பிட்டிய தோட்டத்தில் நிலம் தாழிறங்கியுள்ளதால் நூற்றுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு பெய்த கடும் மழையை அடுத்து நிலம் தாழிறங்கியதாக மக்கள் தெரிவித்தனர்.

இதனால் தொழிலாளர் குடியிருப்புத் தொடர் ஒன்றில் வசித்துவந்த 11 குடும்பங்களைச் சேர்ந்த 45 க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்கள் கோணப்பிட்டிய பிரின்சஸ் மகாவித்தியாலய பழைய கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த பகுதியிலுள்ள மற்றுமொரு தொழிலாளர் குடியிருப்புத் தொடரொன்றில் வசித்துவந்த 16 குடும்பங்கள் அபாய நிலையை எதிர்நோக்கியுள்ளன.

அவர்களையும் பாதுகாப்பான இடத்தில் தங்கவைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்