எனக்கு கேப்பும் கிடையாது ஆப்பும் கிடையாது எப்பவுமே டாப்புதான் – வடிவேலு

எனக்கு கேப்பும் கிடையாது ஆப்பும் கிடையாது எப்பவுமே டாப்புதான் – வடிவேலு

எனக்கு கேப்பும் கிடையாது ஆப்பும் கிடையாது எப்பவுமே டாப்புதான் – வடிவேலு

எழுத்தாளர் Bella Dalima

05 Nov, 2016 | 5:25 pm

சினிமாவில் எனக்கு கேப்பும் கிடையாது ஆப்பும் கிடையாது, எப்பவுமே டாப்புதான் என வடிவேலு தெரிவித்துள்ளார்.

கத்தி சண்டை படத்தின் இசை வெளியீட்டு விழாவிலேயே வடிவேலு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

விஷால் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் காமெடியனாக வடிவேலு நடிக்கின்றார்.

வெளியீட்டு விழாவில் நடிகர் வடிவேலு பேசுகையில்,

[quote]நான் ரொம்ப நாளைக்குப் பிறகு நடிக்க வந்திருப்பதால் கேப் விழுந்துவிட்டதாக ரொம்பப் பேர் பேசினாங்க. எனக்கு கேப்பும் இல்லை, ஆப்பும் இல்லை. இந்த வடிவேலுவுக்கு எப்பவுமே டாப்புதான். இன்னிக்கும் வாட்ஸ் அப், பேஸ்புக், ட்விட்டர் என எங்கும் என்னுடைய காமெடியைத்தான் பேசுறாங்க. அரசியல் மேடைகளில் என்னுடைய காமெடிதான். நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்று கதை கேட்டுக்கொண்டிருந்தேன். சுராஜ் என்னிடம் சொன்ன கதை மிகவும் பிடித்தது. கத்தி சண்டை என்றால் கத்தியால் சண்டை போடுறதோ அல்லது கத்தி கத்தி சண்டை போடுறதோ இல்லை. இது புத்திச்சண்டை. மேலும் விஷால் நடிப்பதால் இப்படத்தில் நடிக்க சம்மதித்தேன்.[/quote]

என தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்