அமெரிக்காவில் 30 இலட்சம் சலவை இயந்திரங்களை மீளப்பெறுகிறது சாம்சங் நிறுவனம்

அமெரிக்காவில் 30 இலட்சம் சலவை இயந்திரங்களை மீளப்பெறுகிறது சாம்சங் நிறுவனம்

அமெரிக்காவில் 30 இலட்சம் சலவை இயந்திரங்களை மீளப்பெறுகிறது சாம்சங் நிறுவனம்

எழுத்தாளர் Bella Dalima

05 Nov, 2016 | 5:37 pm

சாம்சங் நிறுவனத்தின் சலவை இயந்திரங்கள் (வாஷிங் மெஷின்கள்) விபத்துக்களை ஏற்படுத்துவதாக முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளை அடுத்து, அமெரிக்காவில் அந்நிறுவனம் விற்பனை செய்த 30 இலட்சம் சலவை இயந்திரங்களை மீளப் பெறுவதாக அறிவித்துள்ளது.

சாம்சங் நிறுவனம் செல்பேசி, கணனி, மடிக்கணனி மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்வதில் முன்னணியில் உள்ளது.

இந்நிறுவனத்தின் சலவை இயந்திரங்களை வீடுகளில் பாவிக்கும் பொழுது அதிகளவில் அதிர்வை ஏற்படுத்துவதாக 733 முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், அதன் மேற்பகுதி தூக்கி அடித்ததில் அருகில் உள்ளவர்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும் 9 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதனால், 2011 ஆம் ஆண்டு மார்ச் முதல் 2016 நவம்பர் வரை அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட 30 இலட்சம் சலவை இயந்திரங்களைத் திரும்பப் பெறுவதாக சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கு முன்னர் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 7 செல்பேசிகள் அடிக்கடி தீப்பிடிப்பதாக எழுந்த புகாரால் விமானங்களில் இதைக் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்