வெளிநாடுகளில் பணிபுரிபவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் அடுத்த வருடம் அறிமுகம்

வெளிநாடுகளில் பணிபுரிபவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் அடுத்த வருடம் அறிமுகம்

எழுத்தாளர் Staff Writer

03 Nov, 2016 | 8:20 pm

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கை பணியாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் ஒன்றை அடுத்த வருடம் அறுமுகப்படுத்தவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார் .

நியூஸ்பெஸ்ட்டுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்தார்

அமைச்சர் தலதா அத்துகோரல கருத்து தெரிவித்த போது….

[quote]ஜனாதிபதி தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சியும் , ஜனாதிபதியும் கூட்டாக வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளிநாடுகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கான மூன்று வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தன. வெளிநாட்டு பணியாளர்களின் குடும்பங்களுக்கான நலன்புரித் திட்டம் , ஓய்வுதிய திட்டம் மற்றும் பணியாளர்கள் அந்த நாடுகளில் ஆரம்பிக்கும் வங்கி கணக்குகளுக்கு 2.5 வீத வட்டியை வழங்குவது ஆகியன, அந்த மூன்று வாக்குறுதிகள் ஆகும்.இவர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தினை ஜனவரி 8 ஆம் திகதி ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம்.[/quote]

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்