முறிகள் விநியோகம் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்படும் – ஜனாதிபதி

முறிகள் விநியோகம் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்படும் – ஜனாதிபதி

முறிகள் விநியோகம் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்படும் – ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

03 Nov, 2016 | 12:10 pm

மத்திய வங்கியின் முறிகள் விநியோகம் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் கோப் குழு மூலம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றத்தின் மூலம் சுயாதீனமான விசாரணைகளை மேற்கொள்வதற்காக இந்த விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவிப்பதை அனைத்து அரசியல்வாதிகளும் தவிர்க்க வேண்டும் எனவும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

மஹரகமையில் நடைபெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை பலப்படுத்தும் நிகழ்வொன்றின் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்