பிரபல பாடகர் அமரதேவ காலமானார்

பிரபல பாடகர் அமரதேவ காலமானார்

பிரபல பாடகர் அமரதேவ காலமானார்

எழுத்தாளர் Staff Writer

03 Nov, 2016 | 11:34 am

இலங்கையின் பிரபல சிரேஷ்ட இசை கலைஞர் கலாநிதி பண்டித் டப்ளியூ.டி. அமரதேவ இன்று இயற்கை எய்தினார்.

88 வயதான அன்னார் ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இயற்கை எய்தியுள்ளார்.

அன்னாரின் புதல்வர் ரஞ்சன அமரதேவ இதனை நியூஸ்பெஸ்ட்டுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

கலாநிதி பண்டித் அமரதேவ இன்று காலை நோய்வாய்ப்பட்ட நிலையில் ஶ்ரீ ஜயவர்த்னபுர வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.

டபிள்யூ. டி. அமரதேவ 1927 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி மொரட்டுவையில் பிறந்துள்ளார்.

பல்கலைக்கழக பேராசிரியராக கடமையாற்றிய அன்னார் இலங்கையின் சிரேஷ்ட சிங்கள மொழிப் பாடகரும், இசையமைப்பாளருமாவார்.

இலங்கை ஜனாதிபதி விருதான கலா கீர்த்தி விருதை 1986 ஆம் ஆண்டு கலாநிதி பண்டித் டப்ளியூ.டி. அமரதேவ பெற்றுக் கொண்டார்.

இதேவேளை,1998 ஆம் ஆண்டு தேசமான்ய விருதையும் அவர் சுவீகரித்துள்ளார்.

உள்நாட்டில் மாத்திரமின்றி சர்வதேச விருதுகள் பலவற்றையும் கலாநிதி பண்டித் டப்ளியூ.டி. அமரதேவ பெற்றுக் கொண்டுள்ளார்.

பண்டித் டப்ளியூ.டி. அமரதேவவிற்கு 1986 ஆம் ஆண்டு இந்திய அரசின் அதிஉயர் விருதுகளில் ஒன்றாகிய பத்மஶ்ரீ விருது கிடைத்ததுடன், 2001 ஆம் ஆண்டு பிலிபைன்சின் ரமோன் மெக்சைசே விருதும் வழங்கப்பட்டது.

மாலைத்தீவுகள் அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய 1972 ஆம் ஆண்டு அந்நாட்டின் தேசிய கீதத்தை கலாநிதி பண்டித் டப்ளியூ.டி. அமரதேவ இசையமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்