பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று ஹொங்கொங் விஜயம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று ஹொங்கொங் விஜயம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று ஹொங்கொங் விஜயம்

எழுத்தாளர் Staff Writer

03 Nov, 2016 | 11:02 am

ஜேர்மனின் வர்த்தகத்திற்கான 15 ஆவது ஆசிய பசுபிக் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஹொங்கொங்கை சென்றடைந்தார்.

பிரதமர் உள்ளிட்ட தூதுக்குழுவினர், ஹொங்கொங் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக, ஹொங்கொங் நகரை சென்றடைந்ததாக பிரதமரின் உத்தியோகப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹொங்கொங் சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மண்டபத்தில் நடைபெறும், ஜேர்மனின் வர்த்தகத்திற்கான 15 ஆவது ஆசிய
பசுபிக் மாநாட்டில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை உரையாற்றவுள்ளார்.

ஆசிய பசுபிக் வலய சவால்கள் மற்றும் அடுத்தக்கட்ட இலக்கு என்ற தொனிப்பொருளின் கீழ், பிரதமர் இங்கு உரையாற்றவுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்