பண்டித் டப்ளியூ.டீ. அமரதேவவின் மறைவையொட்டி இன்று முதல் ஒருவாரத்திற்கு துக்க காலம் பிரகடனம்

பண்டித் டப்ளியூ.டீ. அமரதேவவின் மறைவையொட்டி இன்று முதல் ஒருவாரத்திற்கு துக்க காலம் பிரகடனம்

பண்டித் டப்ளியூ.டீ. அமரதேவவின் மறைவையொட்டி இன்று முதல் ஒருவாரத்திற்கு துக்க காலம் பிரகடனம்

எழுத்தாளர் Staff Writer

03 Nov, 2016 | 5:28 pm

இலங்கையின் பிரபல சிரேஷ்ட இசைக் கலைஞர் கலாநிதி பண்டித் டப்ளியூ.டீ. அமரதேவவின் மறைவினையொட்டி இன்று முதல் ஒருவாரத்திற்கு துக்க காலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் சனிக்கிழமை சுதந்திர சதுக்கத்தில் பூரண அரச மரியாதையுடன் இறுதி கிரியைகள் நடைபெறவுள்ளதாக ஊடகத் துறை அமைச்சர் கயந்த கருனாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் இதனை கூறினார்.

அன்னாரின் பூதவுடல் எதிர்வரும் சனிக்கிழமை வரை சுதந்திர சதுக்கத்தில் மக்கள் அஞ்சளிக்காக வைக்கப்படவுள்ளது.

88 வயதான அன்னார் ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இயற்கை எய்தியுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்