தொடர்ந்தும் பல இன்னல்களை எதிர்நோக்கி வரும் மீரியபெத்த மக்கள்

தொடர்ந்தும் பல இன்னல்களை எதிர்நோக்கி வரும் மீரியபெத்த மக்கள்

தொடர்ந்தும் பல இன்னல்களை எதிர்நோக்கி வரும் மீரியபெத்த மக்கள்

எழுத்தாளர் Staff Writer

03 Nov, 2016 | 7:14 pm

மீரியபெத்த மண்சரிவின் பின்னர் 2 வருடங்களாக முகாமில் வாழ்க்கையை கழித்த மக்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டு குடியமர்த்தப்பட்ட போதிலும் தொடர்ந்தும் இவரகள் இன்னல்களையே எதிர்நோக்கி வருகின்றனர்.

மீரியபெத்த மண்சரிவினால் பாதிக்கப்பட்டு இரண்டு வருடங்களாக முகாமில் தங்கியிருந்த மக்களுக்கு கடந்த மாதம் 22 ஆம் திகதி புதிய வீடுகள் கையளிக்கப்பட்டன.

எவ்வாறாயினும் அந்த வீடுகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் முழுமையாக பூரணப்படுத்தப்படாமையினால் மழைக் காலங்களில் பல சிக்கல்களை மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.

இதேவேளை இன்றையதினம் தியத்தலாவை இராணுவத்தினர் மக்கள்தெனிய பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு வீடுகளில் காணப்படும் குறைகளை பார்வையிட்ட்டனர்.

மக்கள் இதன்போது அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இராணுவத்தினரிடம் எடுத்துக்கூறினர்.

இது தொடர்பில் உரிய அதிகாரிகளிடம் தாம் கலந்துரையாடுவதாக இராணுவத்தினர் இதன் போது குறிப்பிட்டுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்