கோப் அறிக்கையின் அடிக்குறிப்புகளுக்கு ஒருபோதும் இணங்கப்போவதில்லை – கணக்காய்வாளர் நாயகம்

கோப் அறிக்கையின் அடிக்குறிப்புகளுக்கு ஒருபோதும் இணங்கப்போவதில்லை – கணக்காய்வாளர் நாயகம்

கோப் அறிக்கையின் அடிக்குறிப்புகளுக்கு ஒருபோதும் இணங்கப்போவதில்லை – கணக்காய்வாளர் நாயகம்

எழுத்தாளர் Staff Writer

03 Nov, 2016 | 11:15 am

கோப் அறிக்கையின் அடிக்குறிப்புகளுக்கு ஒருபோதும் இணங்கப்போவதில்லை என கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த அடிக்குறிப்புகள் தொடர்பான தமது சிந்தனையினூடாக எவ்வித மாற்றமும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் கோப் அறிக்கையின் அடிக்குறிப்புகளுக்கு கணக்காய்வாளர் நாயகம் இணக்கம் தெரிவித்துள்ளார் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் இந்த அறிக்கையின் பல விடயங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தெளிவுப்படுத்தல்களும் வழங்கப்படவில்லை எனவும் கணக்காய்வாளர்நாயகம் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இதற்கு தாம் இணக்கம் தெரிவிக்காத போதிலும், என்னுடைய இணக்கப்பாடும் கிடைத்துள்ளதாகவும் கோப் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கணக்காய்வாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்