குழந்தைக்கு தன் உயிரை வழங்கி இவ் உலகை விட்டு நீங்கிய அன்பான தாய்; இந்திரா ஜயசூரிய

குழந்தைக்கு தன் உயிரை வழங்கி இவ் உலகை விட்டு நீங்கிய அன்பான தாய்; இந்திரா ஜயசூரிய

குழந்தைக்கு தன் உயிரை வழங்கி இவ் உலகை விட்டு நீங்கிய அன்பான தாய்; இந்திரா ஜயசூரிய

எழுத்தாளர் Staff Writer

03 Nov, 2016 | 10:37 pm

தாய் பாசத்தை ஒரு போது வார்த்தைகளால் விவரிக்க முடியாது….

மகனை ஆராக்கியமாக இவ்வுலகில் பிரசவிக்க வேண்டும் என்பதற்காக தன் உயிரை துச்சமென எண்ணிய ஒரு தயின் கதை இது….

மார்பகப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த இந்திரா ஜயசூரிய புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுக் கொண்டால் தன் கர்ப்பத்தில் உள்ள சிசுவிற்கு ஆபத்து நேர்ந்து விடும் என்ற அச்சத்தில் புற்றுநோய்க்கான சிகிச்சையை பெற்றுக்கொள்ளவில்லை.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவர் மார்பகப் புற்றுநோயில் பீடிக்கப்பட்டிருந்தார் அந்த காலப்பகுதியில் அவர் புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.

பின்னர் புற்றுநோய் அவரை விட்டு முழுமையாக நீங்கவில்லை என அறியும் போது அவர் 28 வாரம் பூர்த்தியான ஒரு கர்ப்பிணித் தாய்.

சத்திரசிகிச்சையின் மூலம் குழந்தையை பிரசவிப்பதற்கு வைத்தியர்கள் ஆலோசனை வழங்கிய போதும் அவர் அதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை.

புற்றுநோயின் விளிம்பில் இருந்த இந்திரா ஜயசூரிய வைத்திய ஆலோசனையின் படி 33 வாரங்களின் பின்னர் சத்திரிசிகிச்சையின் மூலம் தனது இரண்டாவது குழந்தையை பிரசவித்த அவர் தனது 40 ஆவது வயதில் நேற்றிரவு லண்டனில் காலமானார்.

இந்த அன்பான தாய் நம் நாட்டின் சபாநாயகரின் இளைய மகள் இந்திரா ஜயசூரிய….

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்