கட்டுநாயக்க விமானநிலையத்தின் பிரதி சுங்க பணிப்பாளர்கள் என தெரிவித்து நிதி மோசடியில் ஈடுபட்ட நால்வர் கைது

எழுத்தாளர் Staff Writer

03 Nov, 2016 | 11:44 am

கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் பிரதி சுங்க பணிப்பாளர்கள் என தெரிவித்து நிதி மோசடியில் ஈடுபட்ட 4 பேர் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிக விலை மதுபான வகைகளை குறைந்த விலைக்கு பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்து சில விடுதிகளுக்கு தொலைப்பேசி அழைப்பினூடாக இந்த சந்தேகநபர்கள் அறிவித்துள்ளனர்.

அதற்கமைய மதுபானத்தை பெற்றுக் கொள்ளவந்தவர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு சந்தேகநபர்கள் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதனை அடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பை தொடர்ந்த இராகமை மற்றும் வத்தளை பகுதிகளைச் சேர்ந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்