ஓமந்தையில் பாழடைந்த கிணற்றிலிருந்து தாய் மற்றும் இரண்டரை வயது குழந்தை சடலங்களாக மீட்பு

ஓமந்தையில் பாழடைந்த கிணற்றிலிருந்து தாய் மற்றும் இரண்டரை வயது குழந்தை சடலங்களாக மீட்பு

ஓமந்தையில் பாழடைந்த கிணற்றிலிருந்து தாய் மற்றும் இரண்டரை வயது குழந்தை சடலங்களாக மீட்பு

எழுத்தாளர் Staff Writer

03 Nov, 2016 | 8:03 pm

வவுனியா ஓமந்தை புதிய வேலன்சின்னக்குளம் பகுதியிலுள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து தாய் ஒருவரும் அவரது இரண்டரை வயது குழந்தையும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

நேற்று முற்பகல் வீட்டில் இருந்து வெளியேறிய 24 வயதான நாகநாதன் சுகந்தினியும் அவரது இரண்டரை வயது குழந்தையும் அதிகாலை வரை வீடு திரும்பவில்லை என உறவினர்கள் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணின் மைத்துனர் இன்று காலை இருவரும் கிணற்றினுள் சடலங்களாக மிதந்துக்கொண்டிருப்பதை கண்டுள்ளதுடன் பின்னர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இவர்களது வீட்டிலிருந்து சுமார் ஒன்றரை கிலோமீற்றர் தூரத்திலுள்ள கிணற்றில் இருந்தே சடலங்கள் மீட்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்