கோப் குழுவின் பரிந்துரைகளை திரிபுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுப்பு

கோப் குழுவின் பரிந்துரைகளை திரிபுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுப்பு

கோப் குழுவின் பரிந்துரைகளை திரிபுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

02 Nov, 2016 | 11:41 am

மத்திய வங்கியின் முறிகள் விநியோகம் தொடர்பான கோப் குழுவின் பரிந்துரைகளை திரிபுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி குற்றச்சாட்டியுள்ளார்.

நேற்றிரவு சிரசு ரி.வியில் இடம்பெற்ற சடன விவாத நிகழ்ச்சியின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகளினூடாக இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை பெற்று கொடுப்பதில் சிக்கல் ஏற்படக் கூடும் எனவும் சுனில் ஹந்துன்நெத்தி கூறியுள்ளார்.

மேலும் நாட்டிற்கு ஏற்பட்ட பாரிய நட்டத்தினை மீள பெற்றுக் கொள்ள முடியாது போகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோப் குழுவின் பரிந்துரைகளை திரிபுபடுத்துவதால் அந்த குழுவின் உறுப்பினர்களுக்கு எவ்வித பிரச்சினைகளும் ஏற்படாது எனவும் சுனில் ஹந்துன்நெத்தி சுட்டிக்காட்டியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்