முறிகள் விநியோக மோசடி: குழுவொன்றை நியமித்து அறிக்கை சமர்ப்பிக்க சுதந்திரக் கட்சி தீர்மானம்

முறிகள் விநியோக மோசடி: குழுவொன்றை நியமித்து அறிக்கை சமர்ப்பிக்க சுதந்திரக் கட்சி தீர்மானம்

எழுத்தாளர் Bella Dalima

01 Nov, 2016 | 2:58 pm

முறிகள் விநியோக மோசடி தொடர்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான குழுவொன்றை நியமித்து, ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.

இந்த குழுவில் மேலும் ஆறு உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதாக, கொழும்பில் தற்போது நடைபெற்று வருகின்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அமைச்சர்களான கலாநிதி சரத் அமுனுகம, அனுர பிரியதர்ஷன யாப்பா, டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன ஆகியோரும் இராஜாங்க அமைச்சர்களான, லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன, டிலான் பெரேரா ஆகியோரும் பிரதி அமைச்சர் லசந்த அலகியவன்னவும் இந்த குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த குழுவினர் விரைவில் ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்