வேகமாக உருகி வரும் இமயமலைப் பனிச்சிகரங்கள்: ஏரிகளின் நீர் மட்டம் உயர்வு

வேகமாக உருகி வரும் இமயமலைப் பனிச்சிகரங்கள்: ஏரிகளின் நீர் மட்டம் உயர்வு

வேகமாக உருகி வரும் இமயமலைப் பனிச்சிகரங்கள்: ஏரிகளின் நீர் மட்டம் உயர்வு

எழுத்தாளர் Bella Dalima

01 Nov, 2016 | 4:48 pm

பருவநிலை மாற்றம் காரணமாக இமயமலையில் உள்ள பனிச்சிகரங்கள் வேகமாக உருகி வருகின்றன.

இதனால் இமயமலையின் பல்வேறு பகுதிகளில் பனி மூடிய பிரம்மாண்ட ஏரிகள் உருவாகி வருகின்றன.

குறிப்பாக உலகின் மிக உயர்ந்த எவரெஸ்ட் சிகரத்தின் அருகில் கடல் மட்டத்தில் இருந்து 16,437 அடி உயரத்தில் பனி உருகியதால் இம்ஜா ஷோ என்ற ஏரி உருவானது.

இந்த ஏரியின் நீர்மட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றதால் மலையடிவாரத்தில் உள்ள கிராமங்களுக்கு ஆபத்து ஏற்பட்டது.

இதையடுத்து, அந்த ஏரியின் தண்ணீரை வெளியேற்ற நேபாள அரசு முடிவு செய்தது.

அதன் அடிப்படையில், ஐ.நாவின் வளர்ச்சி திட்டக்குழுவுடன் இணைந்து ஏரித் தண்ணீரை வெளியேற்ற குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவில் நேபாள இராணுவத்தினர் 40 பேரும், உள்ளூரைச் சேர்ந்த 100 மலையேற்ற மக்களும் இடம்பிடித்தனர்.

அவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் இரவு, பகலாகப் பணியாற்றி ஏரி தண்ணீரை வெளியேற்றினர்.

பனி உருகுவதால் 3,000 ஏரிகள் நேபாளத்தில் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்