வெட் மற்றும் தேச நிர்மாண வரித் திருத்தங்கள் இன்றிலிருந்து நடைமுறையில்

வெட் மற்றும் தேச நிர்மாண வரித் திருத்தங்கள் இன்றிலிருந்து நடைமுறையில்

வெட் மற்றும் தேச நிர்மாண வரித் திருத்தங்கள் இன்றிலிருந்து நடைமுறையில்

எழுத்தாளர் Staff Writer

01 Nov, 2016 | 11:25 am

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வெட் மற்றும் தேச நிர்மாண வரித் திருத்தங்கள் இன்றிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன் பிரகாரம் 11 வீதமாகவிருந்த வெட் வரி இன்று முதல் 15 வீதமாக உயர்ந்துள்ளது என அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிகரட், மதுபானம், தொலைபேசி சேவைகள், மின் உபகரணங்கள், வாசனைத் திரவியங்கள், ஆபரணங்கள் மற்றும் பால் மா ஆகியன வெட் வரி அறவீட்டிற்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இதுதவிர சுகாதார சேவைகளில் மருத்துவ பரிசோதனை சேவைகள் உள்ளடங்கலாக வைத்திய கட்டணம், விசேட வைத்திய நிபுணத்துவ கட்டணம் என்பவற்றின் மீதும் வெட் வரி அறவீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வீடுகள் விற்பனைக்கு வெட் வரி விலக்களிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

கோதுமை மா, சீனி, பருப்பு, கருவாடு, ரின் மீன், மாசி, பாண், பசுப்பால், தேயிலை, நெத்தலி, சின்ன வெங்காயம் மற்றும் உரம், மருந்துப் பொருட்கள், கையடக்கத் தொலைபேசிகள், டீசல், மண்ணெண்ணெய், பெற்றோல், போக்குவரத்து சேவைகள் உள்ளிட்ட 82 பொருட்கள் மற்றும் சேவைகள் வெட் வரி அறவீட்டிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, 2 வீதமாக காணப்பட்ட தேச நிர்மாண வரி விகிதத்தில் எவ்வித மாற்றமும் ஏற்பட மாட்டாதெனவும் நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைத் தொடர்பாடல்கள் சேவை மற்றும் மின்சாரம் ஆகியன தேச நிர்மாண வரி அறவீட்டிற்குள் உள்வாங்கப்பட்டுள்ள போதிலும், இது மின்சார கட்டணப் பட்டியலுக்கு தாக்கம் செலுத்தாது என்றும் நிதியமைச்சு மேலும் கூறியுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்