லிந்துலை ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் திருட்டு

லிந்துலை ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் திருட்டு

எழுத்தாளர் Bella Dalima

01 Nov, 2016 | 8:13 pm

லிந்துலை, வேர்ல்ட்ரீம் தோட்டத்தின் கொணன் பிரிவிலுள்ள ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்த பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

ஶ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தின் பூட்டு இன்று அதிகாலை உடைக்கப்பட்டிருந்ததாக ஆலய நிர்வாகத்தினரிடம் இருந்து முறைப்பாடு கிடைத்துள்ளதாக லிந்துலை பொலிஸார் குறிப்பிட்டனர்.

அம்மன் விக்கிரகத்திலிருந்த ஆபரணங்கள் உட்பட பெறுமதிமிக்க தங்க நகைகளும், உண்டியல் பணமும் திருடப்பட்டுள்ளன.

இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் இதுவரை சந்தேகநபர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

கிடைத்துள்ள முறைப்பாட்டின் பிரகாரம், மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்