பாரம்பரியத் தருக்களே எமது மண்ணின் செழுமையை இற்றைவரை தக்க வைத்திருப்பவை: சி.வி.விக்னேஸ்வரன்

பாரம்பரியத் தருக்களே எமது மண்ணின் செழுமையை இற்றைவரை தக்க வைத்திருப்பவை: சி.வி.விக்னேஸ்வரன்

எழுத்தாளர் Bella Dalima

01 Nov, 2016 | 10:15 pm

வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு இன்று கிளிநொச்சியில் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வட மாகாண விவசாய, கமநல சேவைகள், கால் நடை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கல், நீர் வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்,

[quote]இவ்வருடம் இந்நாட்டின் மண்ணுக்கே சொந்தமான மரங்களை நடுவோம் என்ற அடிப்படையில் அவற்றை அடையாளம் கண்டு, மாகாணம் பூராகவும் நடுவதற்கு நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். இவ்வாறான எமது பாரம்பரிய தருக்களே எமது மண்ணின் செழுமையை இற்றைவரை தக்க வைத்திருப்பவை. அவற்றை அடையாளம் கண்டு மீண்டும் மீண்டும் நடுவதால் நாம் எமது பாரம்பரியத்தை வலியுறுத்துகின்றோம். இராணுவத்தினரால் பாதுகாப்பு என்ற சாட்டில் மரங்கள் பல வெட்டப்பட்ட இந்த பிரதேசத்தில் மரங்கள் இருந்தால் தான் வனாந்தரம் போல் எமது மாகாணம் வருங்காலத்தில் ஆகாது காத்திட உதவும். நாட்டை சீர்ப்படுத்தல், கிராமத்தைச் சீர்ப்படுத்தல், வீட்டைச் சீர்ப்படுத்தல் என்ற வகையில், தொடர்ந்து உலகை நல்ல நிலையில் விட்டுச் செல்வதானால் மரங்களை நாட்டிச் செல்வது எமது கடமையாகும். பூட்டான் நாட்டில் எப்பொழுதுமே 72 சதவிகித காணி வனமாக இருக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்துள்ளார்கள். மரங்களின் அத்தியாவசியத்தை அவ்வூர் அரசர் நன்குணர்ந்து சேவையாற்றி வருகின்றார்.[/quote]

 

என்றார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்