பாடசாலை சீருடைக்கான வவுச்சர்களை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

பாடசாலை சீருடைக்கான வவுச்சர்களை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

பாடசாலை சீருடைக்கான வவுச்சர்களை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

01 Nov, 2016 | 7:18 am

பாடசாலை மாணவர்களின் சீருடைக்கான பண வவுச்சர்களை பாடசாலைகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று (01) ஆரம்பமாகவுள்ளன.

வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக பாடசாலைகளின் அதிபர்களுக்கு மாணவர் சீருடைக்கான பண வவுச்சர்கள் அனுப்பிவைக்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளரை மேற்கோள்காட்டி அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாடசாலைகளில் தரம் ஒன்றிற்காக சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்களுக்கான பண வவுச்சர்கள், அவர்கள் பாடசாலைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்ட பின்னரே வழங்கப்படவுள்ளன.

கடந்த வருடத்தில் இடம்பெற்ற குறைபாடுகளை நிவர்த்திசெய்து இந்த வருடம் முறையான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 400,000 மாணவர்களுக்கு சீருடைக்கான பண வவுச்சர்கள் இன்று முதல் விநியோகிக்கப்படவுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்