நுவரெலியா மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்

நுவரெலியா மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Bella Dalima

01 Nov, 2016 | 9:58 pm

பல்கலைக்கழக அனுமதியின் போது நுவரெலியா மாவட்ட மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகத் தெரிவித்து பெற்றோர் இன்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

வெளிமாவட்ட மாணவர்கள் நுவரெலியா மாவட்டம் மூலம் பரீட்சையில் தோற்றுவதனால் தமது பிள்ளைகளுக்குக் கிடைக்க வேண்டிய சந்தர்ப்பம் இல்லாமல் போவதாக பெற்றோர் தெரிவித்தனர்.

சில அதிபர்கள் வெளிமாவட்ட மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கும் வகையில் செயற்படுவதாக இவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன், நுவரெலியா மாவட்டத்திற்கான வெட்டுப்புள்ளி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் பெற்றோர் குறிப்பிட்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்