பண நெருக்கடியைப் போக்க பத்திரத் தாள்களை வெளியிடுகிறது ஜிம்பாப்வே

பண நெருக்கடியைப் போக்க பத்திரத் தாள்களை வெளியிடுகிறது ஜிம்பாப்வே

பண நெருக்கடியைப் போக்க பத்திரத் தாள்களை வெளியிடுகிறது ஜிம்பாப்வே

எழுத்தாளர் Bella Dalima

01 Nov, 2016 | 5:07 pm

பண நெருக்கடியைப் போக்கும் முயற்சியாக பத்திரத் தாள்களை  (bond note) ஜிம்பாப்பே அரசாங்கம் வெளியிடவுள்ளது.

ஜிம்பாப்வேயின் தேசிய ரிசர்வ் வங்கியானது, ‘பத்திர தாள்கள்’ என்று ஜிம்பாப்வே வர்ணிக்கும் புதிய வடிவிலான பணத்தை அச்சடிக்கத் தொடங்கியுள்ளது.

அமெரிக்க டொலருக்கு இணையான மதிப்பை இந்த பத்திரங்கள் கொண்டிருக்கும்.

மேலும், ஆபிரிக்க ஏற்றுமதி – இறக்குமதி வங்கியிலிருந்து சுமார் 200 மில்லியன் டொலர் கடன் இந்த பத்திரங்களுக்கு ஆதரவளிக்கும்.

பத்திரத் தாள்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ள சில தினங்களுக்கு முன்பாகவே, அது பற்றிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் அங்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், சிலர் இத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்