சட்டவிரோத மீன்பிடியால் ஜீவனோபாயம் பெரிதும் பாதிக்கப்படுவதாக முல்லைத்தீவு மீனவர்கள் தெரிவிப்பு

சட்டவிரோத மீன்பிடியால் ஜீவனோபாயம் பெரிதும் பாதிக்கப்படுவதாக முல்லைத்தீவு மீனவர்கள் தெரிவிப்பு

சட்டவிரோத மீன்பிடியால் ஜீவனோபாயம் பெரிதும் பாதிக்கப்படுவதாக முல்லைத்தீவு மீனவர்கள் தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

01 Nov, 2016 | 12:33 pm

முல்லைத்தீவு – கொக்கிளாய் கடல் நீரேரிப் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றமையால் தமது ஜீவனோபாயம் பெரிதும் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

புல்மோட்டைப் பகுதியில் இருந்து வரும் மீனவர்கள் தடை செய்யப்பட்ட சுருக்கு வலைகளை பயன்படுத்தி மீன்பிடியை
முன்னெடுப்பதனால் தாங்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவதனால் தங்களின் பொருளாதாரமும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக முல்லைத்தீவு மீனவர்கள் நியூஸ்பெஸ்ட்டுக்கு குறிப்பிட்டனர்.

மேலும் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் எல்லைத்தாண்டி வந்து தங்களை தாக்குவதாகவும் இந்த மீனவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவித்த போதிலும் இதுவரை எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தங்களின் இந்த பிரச்சினைக்கு உரிய அதிகாரிகள் தீர்வினை பெற்று தருமாறு இந்த மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்