கழிவுப்பொருட்களை வகைப்படுத்தி வழங்காவிட்டால் ஏற்றுக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல்

கழிவுப்பொருட்களை வகைப்படுத்தி வழங்காவிட்டால் ஏற்றுக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல்

எழுத்தாளர் Bella Dalima

01 Nov, 2016 | 8:00 pm

வகைப்படுத்தப்பட்ட கழிவுப்பொருட்களை சேகரிக்கும் தேசிய செயற்றிட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவின் ஆலோசனைக்கு அமைய, வகைப்படுத்தப்பட்ட கழிவுப்பொருட்களைத் தனித்தனியாக சேகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

காகிதம், காட்போர்ட். கண்ணாடி, பிளாஸ்டிக், பொலித்தீன், மற்றும் சிதைவடையும் கழிவுகள் தனித்தனியாக வகைப்படுத்தப்பட்டு சேகரிக்கப்படவுள்ளன.

இந்த செயற்றிட்டத்தினால் உள்ளூராட்சி மன்றங்களால் சேகரிக்கப்படுகின்ற கழிவுப்பொருட்களின் அளவு 50 தொடக்கம் 60 வீதத்தால் குறைவடையும் என நம்பப்படுகிறது.

இதுபற்றி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்ததாவது,

[quote]23 மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சிதைவடையும் மற்றும் சிதைவடையாத கழிவுப்பொருட்களை வகைப்படுத்தி வழங்காவிட்டால் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என அறிவித்துள்ளோம். நவம்பர் முதலாம் திகதி முதல் இதனை நாம் ஆரம்பித்துள்ளோம். இந்த நடவடிக்கையால் குப்பை மேடுகளை நாட்டில் குறைக்க முடியும். அதேபோன்று, கழிவுப்பொருள் மீள்சுழற்சி ஊடாக அபிவிருத்தி அடைந்த நாடுகளில் காணப்படுகின்ற தீர்வுகளை நோக்கி நாம் செல்ல முடியும் என நான் நம்புகின்றேன்.[/quote]

என்றார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்