கழிவுகளை அகற்றும் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

கழிவுகளை அகற்றும் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

கழிவுகளை அகற்றும் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

01 Nov, 2016 | 11:40 am

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சினால் அமுல்படுத்தப்பட்டுள்ள வகைப்படுத்தப்பட்ட உக்கும் மற்றும் உக்காத கழிவுகளை அகற்றும் திட்டம் இன்று (01) முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த திட்டம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை உத்தியோகபூர்வதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் இன்று முதல் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மாநகர சபைகள் மற்றும் பிரதேச சபைப் பிரிவுகள் தோறும் வெற்றிகரமாக இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

முறையாக கழிவுகளை அகற்றாதவர்களுக்கு எதிரான கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்