முறிகள் மோசடி தொடர்பில் கணக்காய்வாளர் நாயகத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை

முறிகள் மோசடி தொடர்பில் கணக்காய்வாளர் நாயகத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

30 Oct, 2016 | 8:02 pm

மத்திய வங்கியின் முறிகள் விநியோகம் தொடர்பிலான கோப் குழுவின் அறிக்கையை தயாரிக்கும் பொழுது கணக்காய்வாளர் நாயகம் அதிக பங்களிப்பு வழங்கியிருந்தார்.

கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க இன்று எமது சகோதர தொலைக்காட்சியான TV1 விசேட செவ்வி ஒன்றில் கலந்து கொண்டார்.

கணக்காய்வாளர் நாயகத்துடனான விசேட செவ்வியின் போது…

[quote]கேள்வி – உங்களது அறிக்கை மற்றும் உங்களது ஆய்வுக்கும், கோப் குழுவின் அறிக்கைக்கும் இடையில் பிரச்சினை இருக்கிறாதா?

பதில் – காமினி விஜேவர்த்தன – கணக்காய்வாளர் நாயகம்.
பிரச்சினை என அடையாளப்படுத்துவதை விட மேலும் தெளிவுபடுத்துல் என பயன்படுத்தலாம் என நினைக்கிறேன். என்னுடைய ஆய்வினை பார்க்கும் பொழுது இதனை வேறு விதத்தில் வெளியிட்டிருக்கலாம் என சிலர் நினைக்கக்கூடும். அதில் சில குறிப்புக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவ்வாறு சேர்க்கப்பட்டமையால் எனது நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுவதில்லை. இந்த அறிக்கையை ஆராய்ந்த பின்னரே இது தயாரிக்கப்பட்டுள்ளது. அறிக்கையுடன் சில விடயங்களை சேர்த்துள்ளமையால் எனது நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுவில்லை.

கேள்வி – அறிக்கை தயாரிக்கப்பட்ட பின்னர் உங்களது கண்காணிப்பின் படி மொத்தமாக எவ்வளவு நட்டம் ஏற்பட்டுள்ளது.

பதில் – உண்மையில் அது ஒரு சிக்கலான கேள்வி நட்டம் ஏற்பட்ட வருடத்துடன் அதனை ஆராய வேண்டும். நாட்டிற்கு ஏற்பட்டுள்ள இழப்பு தொடர்பில் பல்வேறு பரஸ்பர கருத்துக்களை தெரிவிக்க முடியும். எனினும் கணக்காய்வாளர் நாயகம் என்ற வகையில் இந்த விடயத்தை நாங்கள் ஆராய்ந்தோம். தவறான ஒரு தீர்மானித்தினால் ஏற்பட்ட நட்டம் தொடர்பிலேயே ஆராயப்பட்டுள்ளது. அதனை விடுத்து 30 வருடங்களுக்கு அல்லது 15 வருடங்களுக்கு என்ற அடிப்படையில் தீர்மானம் எடுக்கப்படவில்லை.

கேள்வி – ஏற்பட்ட நட்டத்தின் பெறுமதியை உங்களது அறிக்கையில் குறிப்பிட்டிள்ளீர்களா?

பதில் – ஆம். அது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.[/quote]

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்