நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் செயலிழந்த மின்பிறப்பாக்கியின் திருத்தப் பணிகள் நிறைவு

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் செயலிழந்த மின்பிறப்பாக்கியின் திருத்தப் பணிகள் நிறைவு

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் செயலிழந்த மின்பிறப்பாக்கியின் திருத்தப் பணிகள் நிறைவு

எழுத்தாளர் Staff Writer

30 Oct, 2016 | 3:40 pm

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் முதலாவதாக செயலிழந்த மின்பிறப்பாக்கியின் திருத்தப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த மின்பிறப்பாக்கியிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் நாளை தொடக்கம் தேசிய மின்
கட்டமைப்புடன் இணைக்கப்படும் என மின்சக்தி அமைச்சின் அபிவிருத்தி பணிப்பாளரும் ஊடகப்
பேச்சாளருமான சுலக் ஷன ஜெயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை செயலிழந்துள்ள ஏனைய மின்பிறப்பாக்கிகளின் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மின்பிறப்பாக்கிகள் செயலிழந்தமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணையின் அறிக்கையை
விரைவில் பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் மின்சக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நுரைச்சோலை அனல் மின்உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடலாவிய ரீதியில்
மின்சார விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்