நீர்கொழும்பு – ஜாஎல பிரதான வீதியில் விபத்து: இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழப்பு

நீர்கொழும்பு – ஜாஎல பிரதான வீதியில் விபத்து: இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழப்பு

நீர்கொழும்பு – ஜாஎல பிரதான வீதியில் விபத்து: இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

30 Oct, 2016 | 1:27 pm

நீர்கொழும்பு – ஜாஎல பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பொலிஸார் உயிரிழந்துள்ளனர்.

பொலிஸார் பயணித்த மோட்டார் சைக்கிலொன்று காரொன்றுடன் மோதி நேற்றிரவு 10.10 இற்கு விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய காரை செலுத்தியவர் அதிக மது போதையில் இருந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு பொலிஸாரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்